என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அனில் சாஸ்திரி
நீங்கள் தேடியது "அனில் சாஸ்திரி"
மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவரது மகன் கோரிக்கை வைத்துள்ளார். #LalBahadurShastri #AnilShastri
சண்டிகார்:
மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதப்பட்ட ‘லால்பகதூர் சாஸ்திரி: லெசன்ஸ் இன் லீடர்சிப்’ என்னும் ஆங்கிலப்புத்தகம், பஞ்சாபி மொழியில் நேற்று வெளியிடப்பட்டது. சண்டிகாரில் நடந்த இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அனில் சாஸ்திரி கூறியதாவது:-
எனது தந்தையின் மர்ம மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவருடைய மகன் என்கிற முறையில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுபற்றி ஆய்வு செய்ய 1977-ம் ஆண்டு ராஜ்நாரயண் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையையும் மத்திய அரசு வெளியிடும்படி வேண்டுகிறேன். பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த கோரிக்கையை வைத்தது. ஆனாலும் அவர்கள் பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதைச் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நேருவின் மறைவுக்கு பிறகு பிரதமராக பதவி வகித்தவர் லால்பகதூர் சாஸ்திரி, 1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி சோவியத் ரஷியாவில், பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். தாஷ்கண்ட் நகரில் தங்கியிருந்தபோது மறுநாள் திடீரென மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பில் இறந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவருடைய குடும்பத்தினர் இதில் அமெரிக்காவின் சதிவேலை இருக்கலாம் என்று குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. #LalBahadurShastri #AnilShastri

×

X